தலைநகர் டெல்லியின் பட்பர்கஞ்ச் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ரவீந்தர் சிங் நெகி. இவர் யமுனை ஆற்றை தூய்மைபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் யமுனை ஆற்றங்கரையில் நின்றவாறு வீடியோ எடுக்க முயன்றார்.
அப்போது ரவீந்தர் சிங் திடீரென நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் உடனடியாக அவரை ஆற்றில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
