Saturday, December 27, 2025

டெல்லியை விட்டு வெளியேறுங்கள் : மருத்துவர்கள் அறிவுரை

டெல்லியில் தற்போது காற்று மாசு நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், பொதுமக்கள், குறிப்பாக நுரையீரல் பிரச்சனைகள் அல்லது புகையிலை பழக்கம் உள்ளவர்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நுரையீரல் மருத்துவர்கள் அறிவுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள என்சிஆர் பகுதியில் காற்று மாசு நிலை மிக மோசமாக மாறியுள்ளது. தற்போது காற்று மாசு விகிதம் 301-400 என்ற மிகவும் மோசமான நிலையில் உள்ளது,. இதன் காரணமாக, நுரையீரல் பிரச்சனைகள் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை அதிகரித்துள்ளன. இந்த நிலைமை, ஏற்கனவே நுரையீரல் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது.

குறிப்பாக, 6-8 வாரங்கள் டெல்லியை விட்டு வெளியேறுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம், இந்த ஆண்டு இறுதி வரை காற்று மாசு நிலை மேலும் மோசமாகி, மேலும் ஆபத்தானதாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் என நுரையீரல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News