ஹைதராபாத்தில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி உள்ளார். இந்நிலையில், தெலுங்கானா அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது, ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை ஒட்டிய உயர்மட்ட சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு சாலைக்கு கூகுள் ஸ்ட்ரீட் என பெயர் சூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கேட்டு தெலங்கானா அரசு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் அமெரிக்க தூதரகத்துக்கு கடிதம் எழுத உள்ளது.
