தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைப்புரியாத தேர்வர்கள், தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு ஜூன் 25-ந்தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.