அலாரம் வைப்பதற்கும், நேரம் பார்ப்பதற்கும், அழைப்பு வந்தால் உடனே எடுப்பதற்கும், முக்கிய குறுஞ்செய்திகளுக்கும் என பல்வேறு காரணங்களுக்காக உறங்கும் போது மொபைல் போன்களை அருகிலேயே வைத்து கொண்டு தூங்குகிறோம். ஆனால் இவ்வாறு செல்போனை வைத்துக்கொண்டு தூங்கினால் உடல் மற்றும் மனநலத்தில் பல தீவிர விளைவுகள் ஏற்படும்.
செல்போனிலிருந்து வரும் மின்காந்த கதிர்வீச்சு காரணமாக தலைவலி, கண் எரிச்சல், மற்றும் மன அழுத்தம் ஏற்படக்கூடும். குறிப்பாக, ஆண்கள் பேண்ட் பாக்கெட் மற்றும் பெண்கள் மார்புக்கருகே செல்போன் வைப்பது ஆண்மை குறைவு மற்றும் மார்பக புற்றுநோய் பாதிப்புகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சில சமயங்களில் செல்போன் அதிக வெப்பமாகி தீப்பற்ற வாய்ப்பு உள்ளது. அதனால் தலையணைக்கருகே வைப்பது ஆபத்தாகும். இரவு நேரத்தில் போனில் இருந்து வெளியாகும் வெப்பமானது, உடலுக்குள் இருக்கும் செல்களை அளிக்கக்கூடும்.
செல்போனை உங்கள் அருகில் வைத்துக்கொண்டு தூங்கும்போது அதிலிருந்து வெளியேறும் கதிரியக்கம் உங்கள் உடலில் மெலடோனின் ஹார்மோனில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஹார்மோன்தான் உங்கள் நிம்மதியான தூக்கத்திற்கு காரணமாக அமைகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போது அது உங்கள் தூக்கத்தை பாதிக்கும். எனவே உங்கள் செல்போனை அருகில் வைக்காமல் சிறிது தூரம் தள்ளிவைத்து தூங்குவது நல்லது.