நடனமாடும் மீன்கள்

483
Advertisement

பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும்
PALAU என்னும் தீவில் ஜெல்லி ஃபிஷ் ஏரி, பிலிப்பைன்ஸ்
நாட்டிலிருந்து சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில்
இந்தத் பலாவு தீவு உள்ளது.

460 மீட்டர் நீளமும் 160 மீட்டர் அகலமும் 50 மீட்டர் ஆழமும் உள்ள
இந்த ஏரியில் தினமும் 10 மில்லியனுக்கும் அதிகமான கோல்டன்
ஜெல்லி ஃபிஷ்கள் நாட்டிய அரங்கேற்றம் செய்கின்றன. இதைப்
பார்ப்பதற்காக ஏராளமானோர் இங்கு வருகின்றனர். இதனால்,
சிறந்த சுற்றுலாத்தலமாக இந்த ஏரி திகழ்கிறது.

ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்துக்காகக் காத்திருக்கும் இந்த மீன்
கூட்டம், சூரியன் உதயமானவுடன் நீரின் மேற்பரப்புக்கு வந்துவிடுகின்றன.
சூரியன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும்போது மீன் கூட்டமும் நகரத்
தொடங்கிவிடுகின்றன. சூரியன் மறையும்போது ஏரியின் மறுகரையை
அடைகின்றன.

ஜெல்லி மீன்களின் இந்த நடனத்துக்குக் காரணம் சூரிய ஒளியே. இந்த வகை
மீன்கள் உயிர் வாழ சூரிய ஒளி அவசியமாகும். அதனால்தான் ஸ்பெஷல்
டான்ஸ் புரோகிராம் நடத்தி சூரிய ஒளியைப் பெற்று வருகின்றன.

பார்ப்பதற்கு அழகாகவும் சிறியதாகவும் இருக்கும் ஜெல்லி மீன்கள் மனிதனுக்கு
ஆபத்து விளைவிக்கக்கூடியவை. எனவே, அருகில் சென்று பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

டயனோசர் தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜெல்லி
மீன் இனம் தோன்றிவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஜெல்லி மீன்களுக்கு
இறப்பே கிடையாதாம். ஒருவேளை நோய் காரணமாகவோ வேறு காரணங்களாலோ
இதன் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டால் மீண்டும் அந்த உறுப்புகள் நன்கு வளர்ந்துவிடுமாம்…

விஞ்ஞானிகளுக்கே புரியாத புதிராக உள்ளது ஜெல்லி மீன்களின் இறவா வாழ்வு.
கொடைக்கானல் ஏரியில் ஜெல்லி மீன்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதன் உடல் மேற்பகுதி குடை போன்று இருக்கும். உடலின் 5 சதவிகிதம் மட்டுமே
திடப்பொருளால் ஆனது. 95 சதவிகித உடல் பாகங்கள் நீரால் ஆனது.

ஒவ்வோராண்டும் நவம்பர் 3 ஆம் தேதி உலக ஜெல்லி மீன்கள் தினம் கொண்டாடப்படுகிறது.