மிகவும் மெதுவான 2Gயில் பிரபலமான இணைய பயன்பாடு 3G, 4G என வளர்ச்சி பெற்று இன்று விரைவில் அனைவரும் பயன்படுத்தப் போகும் 5G நெட்ஒர்க் ஆக இணைய வாழ்க்கையை ஆக்கிரமிக்க உள்ளது.
இந்திய இஸ்ரேலிய சைபர் பாதுகாப்பு நிறுவனமான Safehouse Techஇன் முதன்மை அதிகாரியான ருச்சிர் ஷுக்லா தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் 5G இணைய சேவையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை பற்றி விளக்கியுள்ளார்.
5Gயின் வேகம் தான் அதன் முதன்மையான சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. ஆனால், எந்த அளவுக்கு இந்த வேகம் பயனாக அமையுமோ அந்த அளவிற்கு பாதகமாகவும் மாற வாய்ப்புள்ளது. ஏனெனில், ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு அதிவேகமான இணைய சேவை எந்தளவிற்கு உபயோகமாக இருக்குமோ, அதே நேரத்தில் hackerகள் போன்ற சைபர் குற்றவாளிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இணையத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி சூழலை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளவும் உதவும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், பண பரிவர்த்தனை தொடங்கி பல்வேறு சேவைகளிலும் டிஜிட்டல் தளங்களை இணைத்து வைத்துள்ளது சைபர் கொள்ளைகளின் போது hackerகள் சுலபமாக பல தகவல்களை திருட ஏதுவாக அமைவதாக கூறும் ருச்சிர், 5G பரவலான பொதுப் பயன்பாட்டுக்கு வரும்போது இதுவரை இல்லாத பல சைபர் பிரச்சினைகளும் அறிமுகமாகும் என பகிர்ந்திருப்பது டெக் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.