2026 IPL சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை வெளியிட இன்று மாலை வரை கெடு விடுவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் பட்டியலை விடுவித்து வருகிறது.
அந்த வகையில், ஜடேஜாவை Trade மூலம் விடுவித்துள்ளது. மேலும், பதிரனா உள்ளிட்ட 11 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்துள்ளது. தீபக் ஹூடா, நகர்கோட்டி, ஆன்ட்ரே சித்தார்த், ராகுல் திரிபாதி, ஷேக் ஹசீத், விஜய் சங்கர், ரச்சின் ரவீந்திரா, சஞ்சு சாம்சன், ஜடேஜா, பதிரனா, கான்வே, வன்ஷ் பேடி ஆகிய 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
