ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் குருநத்தம். இவர், மனைவி லட்சுமியை விட்டு விட்டு, ஐதராபாத் நகரில் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார்.
குருநத்தம், அவ்வப்போது குடும்பத்தினரை பார்க்க கிராமத்திற்கு வருவார். அப்போது மனைவியிடம் இருந்து செலவுக்கு பணம் வாங்கி விட்டு சென்று விடுவார்.
இந்நிலையில், அவர் மனைவியை கயிற்றால் கட்டி நிற்க வைத்து, [பெல்டால் அடித்துள்ளார். இதனால் வலி தாங்கமுடியாத அவர் கதறியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். எனினும் அப்போதும் விடாமல் அவர் தாக்குதலில் ஈடுபட்டார்.
செலவுக்கு பணம் தரும்படி கேட்டபோது, இப்போது பணம் இல்லை என கூறிய ஆத்திரத்தில் அவர் மனைவியை தாக்கியுள்ளார் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.