கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் காகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாலையில் இறந்து கிடந்தன. இதனை உணவாக சாப்பிட்ட கோழிகளும் இறந்து காணப்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
பறவை காய்ச்சல் காரணமாக காகங்கள் இறந்து உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது புரியாமல் பொதுமக்கள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.
