இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் இதுவரை 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2010ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் முதல்முறையாக இந்திய அணிக்காக களம் இறங்கினர். கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவர் அஸ்வின்.
இந்நிலையில் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வெளியான அறிவிப்பால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.