Friday, July 4, 2025

புதிதாக திறக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டிடத்தில் விரிசல்

காஞ்சிபுரத்தில் கடந்த வாரம் திறக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல்கள் உள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலமங்கலம் ஊராட்சி சிறு மாத்தூர் பகுதியில் 51 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் 420 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. சுமார் 4.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் கட்டப்பட்டது.

இதனை கடந்த வாரம் மக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் தாமோ.அன்பரசன் திறந்து வைத்தார். இந்த நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல்கள் உள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த கட்டுமானமே இப்படி இருந்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கட்டிடத்தின் உறுதி தன்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news