Monday, January 26, 2026

பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீஸ் இல்லை, நீதிமன்றம் தடை – பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

தணிக்கைச் சான்றிதழ் தாமதமானதால், தயாரிப்பு நிறுவனம் அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இது தொடர்பான தீர்ப்பு இன்று (ஜனவரி 9) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்து.

இதையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு U/A சென்சார் சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மறுஆய்வுக்கு அனுப்பிய உத்தரவையும் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனது தொடர்ந்து, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சென்சார் போர்டு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை பிற்பகலில் நடைபெற்றது.

இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு U/A சென்சார் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவை நீதிமன்றம் தடை செய்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கலுக்கு ஜனநாயகன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போயுள்ளது.

Related News

Latest News