Thursday, January 15, 2026

யூடியூப்பில் வீடியோ பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்ட தம்பதி

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரமைய்யா (வயது 51) அவரது மனைவி அஞ்சலி (வயது 48), இவர்கள் தங்களின் இளைய மகளின் திருமணத்திற்கு கடன் வாங்கி அதனை திருப்பி அடைப்பதில் கடுமையான சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் பிரமைய்யா தனது செல்போனில் உள்ள யூடியூப் வீடியோக்கள் மூலம் ‘செயின் பறிப்பு’ தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு அதில் ஈடுபட்டனர்.

அவர்கள் ஐதராபாத் வந்த போது வயதாகிய பெண்களை குறிவைத்து செயின் பறிப்பை தொடர்ந்து செய்தனர். அதனை தனியார் நிதி நிறுவனத்தில் வைத்து கடன் பெற்று, அதில் பெற்ற பணத்தால் கடன்களை செலுத்தினர்.

சமீபத்தில் சிக்கட் பள்ளி அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு மூதாட்டியைத் தாக்கிப் செயின் பறித்த பிரமைய்யா, போலீசாரின் கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார். இதையடுத்து போலீசார் அவரையும் அவரது மனைவியையும் கைது செய்து விசாரித்தனர்.

போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் இளைய மகளின் திருமண கடன்களை அடைக்க யூடியூப் பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

Related News

Latest News