கடந்த பிப்ரவரி மத்தியில் தொடங்கிய பதற்றம் . இன்றுவரை உலகம் முழுவதும் ” நோ வார் ” என்ற முழக்கம் ஒலிக்கிறது . ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின் படி , ரஷ்ய படையெடுப்பு காரணமாக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் அகதிகள் நெருக்கடி இது என்று அகதிகளுக்கான ஐ.நா தெரிவித்தவுள்ளது.
உக்ரைனில் இருந்து வெளியேறிய மக்கள் எந்தெந்த நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்? என்று தெரியுமா… ?
இது குறித்து ஐ.நா சமீபத்தில் வெளியீட்டு உள்ள அறிக்கையில் ,
போலந்து, ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் மால்டோவா போன்ற மேற்கில் உள்ள அண்டை நாடுகளுக்கு உக்ரைன் அகதிகள் கடந்து செல்கின்றனர் மற்றும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பெலாரஸ் சென்றுள்ளனர்என தெரிவித்து உள்ளது.
ஐ.நா கடந்த மார்ச் 9 ஆம் தேதி வெளியீட்டுவுள்ள புள்ளிவிவரத்தின் படி,
போலந்து – ற்கு 1,412,502 – பெரும்
ஹங்கேரி – 214,160
ஸ்லோவாக்கியா – 165,199
ரஷ்யா – 97,098
ருமேனியா – 84,671
மால்டோவா – 82,762
பெலாரஸ் – 765 மற்றும்
255,000 க்கும் அதிகமான மக்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.