உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலும் ஊழல் உள்ளது. சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கிறார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
வேலூரில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அரசு செலவில் பலகோடி ரூபாய் பிரசாரத்துக்கு பயன்படுத்துவது போல் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உள்ளது.
4 ஆண்டில் செய்ய முடியாததை 45 நாளில் செய்வதாக சொல்கிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலும் ஊழல் உள்ளது. சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கிறார்கள். மனு அளிக்க வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. மிக தவறான சூழல் உள்ளது என கூறியுள்ளார்.