தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணா சிலை உள்ளது. இந்த சிலை மீது திமுக-பாஜக கொடியை இணைத்து போடப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து அங்கு வந்த போலீசார், அண்ணா சிலை மீது இருந்த கொடியை அகற்றினர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கொடிகளை இணைத்து மாலை போன்று அண்ணா சிலையில் மீது அணிவித்தது தெரியவந்தது.