மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், மீண்டும் அசுத்தமான குடிநீர் காரணமாக ஒரே பகுதியில் 22 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசுத்தமான குடிநீர் காரணமாக அவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் உடல்நிலை மோசமாக இருந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மீதமுள்ளவர்களும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் சிவம் வர்மா மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களின் உடல்நிலையை விசாரித்தார். குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன் இந்தூரின் பாகீரத்புரா பகுதியில் இதேபோன்ற அசுத்தமான குடிநீர் காரணமாக 23 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
