சென்னை, வளசரவாக்கம் அடுத்த காரம்பாக்கம் விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் தளபதி பாஸ்கர்(52). இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கமிட்டி உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு இவரும், இவரது மனைவியும் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்துள்ளனர். அவர்களை அவரது மகன் மீட்டு விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சிவலிங்கா சிட் பைனான்ஸ் வைத்து நடத்தி வந்த பாஸ்கர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கணவன் மனைவி இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
