தமிழக வெற்றிக் கழகத்துடன், காங்கிரஸ் கூட்டணி வைக்க உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பரப்புரையில் பேசிய அவர், கடந்த ஆட்சியின்போது, டாஸ்மாக்கால் தமிழகத்தில் விதவைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கூறிய கனிமொழி, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதுகுறித்து வாய் திறக்கவில்லை என்றார். பா.ஜ.க-வுக்கு அதிமுக அடிமையாக இல்லை என்றும், தமிழக அமைச்சர்கள்தான், மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு அடிமையாக உள்ளதாக தெரிவித்தார்.
