நெல்லையில் நடந்த கவின் ஆணவப் படுகொலை குறித்து பிரபல யூடியூபர்களான ‘பரிதாபங்கள்’ கோபி- சுதாகர் தற்போது வெளியிட்டிருக்கும் கிண்டல் வீடியோவானது, பெரும்பாலானோரின் வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது கோவை மாநகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இரு குடும்பங்கள் இடையேயான மோதலை இரு சமூக மோதலாக சித்தரிப்பதாக, கோவையைச் சேர்ந்த வழக்கறிஞ தனுஷ்கோடி பெயரில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.