பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவுகிறது. இதன் காரணமாக ராமதாஸ், அன்புமணி இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரித்துள்ளது. இதற்கு ராமதாஸ் தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் டெல்லி நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது, பாமக கவுரவ தலைவராக உள்ள ஜி.கே மணி புகார் அளித்துள்ளார். அதில் அவர், “அன்புமணி தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். ஆவணங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியின் தலைவர் பதவி இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. போலியான ஆவணங்களை வழங்கி தலைவர் பதவி பெற்றுள்ள அன்புமணி மீது நடவடிக்கை வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
