Friday, March 14, 2025

ஆயிரத்திற்கு பதில் தவறுதலாக கோடியில் சம்பளம் செலுத்திய நிறுவனம்

உங்கள் கணக்கில் வழக்கமாக செலுத்தப்படும்  சம்பளத்தை விட லட்சமோ அல்லது  கோடி கணக்கில் தவறுதலாக உங்கள் நிறுவனம் செலுத்தினால் என்ன செய்வீர்கள் ?

அப்படி நிகழுமா ?  என நினைத்துக்கூட பார்த்திராதவர்களுக்கு தென் அமெரிக்காவில் நடந்த சம்பவம் ஆச்சிரியம் அளிக்கும்விதம் உள்ளது. அங்குள்ள நிறுவனம் ஒன்று தன் ஊழியர் ஒருவருக்கு,அவரின் மாதசம்பளமான 43 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.1.4 கோடியை அவரின் கணக்கில் செலுத்திள்ளது.

கனவில் கூட இதை எதிர்பார்த்திடாத அந்த ஊழியர் , இதை பற்றி எவரிடமும் தெரிவிக்கவில்லை,குறிப்பாக தன் நிறுவனத்திடம் வாயை திறக்கவே இல்லை, மாறாக அவசர அவசரமாக தன் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

சில நாட்களுக்கு பின் கோடிரூபாய் பணம் தவறுதலாக மாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்நிறுவனம் ராஜினாமா செய்த ஊழியரை தேடியுள்ளனர்.ஆனால் அந்த நபர் தலைமறைவு ஆனதையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

Latest news