Friday, December 27, 2024

இனி பழங்களை இப்படி சாப்பிடாதீங்க

ஆரோக்கியமான உடல்நலனுக்கு தேவையான விட்டமின்ஸ், மினெரல்ஸ், நார்ச்சத்து, anti oxidants என பழங்களில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் ஏராளம்.

ஆனால், பழம் சாப்பிடும் முறையில் செய்யும் சிறு தவறுகள், பழங்களில் இருக்கும் சத்துக்களை முழுமையாக பெறுவதற்கு தடையாக அமைகின்றன.

புளிப்பு சுவை நிறைந்த பழங்களில் விட்டமின் C நிறைந்திருக்கும். அவ்வாறான பழங்களை முன்னதாக வெட்டி காற்று படும்போது, விட்டமின் சத்துக்கள் குறையும் என்பதால், பழங்களை  வெட்டிய பின் உடனடியாக சாப்பிட வேண்டும்.

மேலும், மாங்காய், நெல்லிக்காய் மற்றும் கொய்யா போன்றவற்றில் லேசாக உப்பு மசாலா சேர்த்து சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும்.

ஆனால், உப்பு அல்லது சக்கரை பழங்களில் சேர்த்து சாப்பிடும் போது நம் உடலில் சக்கரை மற்றும் சோடியம் அளவு அதிகரிக்கும் என்பதால் இந்த பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும். பழங்களில் குறிப்பிடத்தக்க அளவு கலோரிகள் இருப்பதால், மற்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்து, பழங்களையே உணவாக எடுத்து கொள்வது அல்லது மாலை நேரங்களில் நொறுக்கு தீனிக்கு பதிலாக சாப்பிடுவது என வழக்கப்படுத்தி கொண்டால் சிறப்பான பலன்களை பெறலாம் என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Latest news