உங்களுக்கு தலைவலி ஏற்பட இந்த உணவுகள் தான் காரணம்!

141
Advertisement

கண் பார்வை கோளாறு, அதிகப்படியான சத்தம் மற்றும் வெளிச்சம், எரிச்சலூட்டும் சூழல் என தலைவலி ஏற்பட பல உடல் மற்றும் மனநிலை சார்ந்த பல காரணிகள் உள்ளன.

ஆனால், நாம் சாதாரணமாக சாப்பிடும் சில உணவுகள் தலைவலிக்கு காரணமாக அமைவதை நம்ப முடிகிறதா? Cheese மற்றும் சாக்லேட்டில் உள்ள டைரமைன் எனும் உட்பொருள், இரத்த குழாய்களை சுருக்குவதால் தலைவலி வர வாய்ப்புள்ளது. அதிக அளவு Red Wine உட்கொள்ளும்போது சிலருக்கு தலைவலி வருவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

செயற்கை இனிப்பூட்டிகளில் இருக்கும் அஸ்பார்டேம் (Aspartame), மகிழ்ச்சிக்கு காரணமான டோபமைன் அளவுகளை குறைத்து தலைவலியை ஏற்படுத்துகிறது. Lactose Intolerance எனும் பால் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு பால் குடிப்பதால் தலைவலி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

சிட்ரஸ் பழங்களில் இருக்கும் Octopamine எனும் உட்பொருள் பலருக்கும் தலைவலி ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. can செய்யப்பட்ட மீன்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட மாமிச உணவுகள் தலைவலியை ஏற்படுத்தலாம் எனக் கூறும் மருத்துவர்கள், தங்களுக்கு இருக்கும் ஒவ்வாமைகளை சரிவர கண்டுபிடித்து ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பதன் மூலம், உணவின் வழியே வரும் தலைவலியை தடுக்க முடியும் என கருத்து தெரிவிக்கின்றனர்.