சென்னையில் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை குறைந்தது..!!

ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன.

இந்நிலையில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.14.50 குறைந்து ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

Related News

Latest News