Wednesday, October 1, 2025

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், அக்டோபர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.16.50 உயர்ந்து, ரூ.1,754.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News