வால் நட்சத்திரம்!உண்மையில் இது நட்சத்திரமா?

287
Advertisement

வால் நட்சத்திரங்கள் உண்மையில் நட்சத்திரம் அல்ல என்று கூறினால் நம்புவீர்களா நீங்கள்?”நீங்க நம்பலனாலும் அது தான் நிஜம்என்னும் வசனத்திற்கேற்ப அது நட்சத்திரங்களே அல்ல என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஒருங்கிணைக்க பட்ட பாறைகள்,carbon-di-oxide, carbon monoxide,நீர்ப்பனி ,methane ,அம்மோனியா மற்றும் தூசுக்கள் கலந்த உருவானவை இந்த பனி பந்து ,dirty snowballs என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இதில் வெளிப்புறம் உள்ள பனி, படிகம் போன்று இருக்கும் மற்றும் அதில் தூசுகளும் ,கனிமசேர்மங்களும் கலந்திருக்கும்,இந்த பனிப்பந்து தனக்கென ஒரு சுற்றுப்பாதையை அமைத்து கொன்று சூரியமண்டலத்தை சுற்றி வரும்.

இந்த பனிப்பந்து சூரியனிடையே வரும்பொழுது,அதில் உள்ள உட்கரு சூரியனின் கதிர்வீச்சால் தளர்வடைந்து விரியும் அந்நிலைக்கு பெயர் “coma”.

பனிப்பந்து சூரியனை சுற்றி வரும்பொழுது ,சூரியனின் அனல் காற்றால் தூசுகளும்,வாயுக்களும் கோமாவிலுருந்து வெளியேறி சூரியனிற்கு எதிர்புறமாக வால் போல நீளுமாம்.இவ்வாறு நீளும் இந்த வால் 15 கோடி கிலோமீட்டர் என்றும் வானியல் கணக்குப்படி அது 1 வானியல் என கூறுவார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

எனவே இது நட்சத்திரம் அல்ல என்பது குறிப்பிடதக்கது.