Tuesday, January 13, 2026

கோயம்பேட்டில் பேருந்தின் மீது ஏறி கல்லூரி மாணவர்கள் அட்டூழியம்

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின்மீது பூந்தமல்லி செல்லக்கூடிய பேருந்து வந்துகொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பயணித்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கியபடியும், பேருந்தின்மீது ஏறியும், ஜன்னல்களில் அமர்ந்தும் அட்டூழியம் செய்துள்ளனர்.

பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், வீடு திரும்பிய மாணவர்கள் பேருந்தில் பாடலை பாடிக்கொண்டு ரூட் எடுத்து ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர். மேலும், அவர்கள் அட்டூழியத்தால் பேருந்தை இயக்க முடியாமல் ஓட்டுநர் பரிதவித்துள்ளார்.

மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related News

Latest News