கோயம்புத்தூர் ரயில் நிலையம் விரைவில் புதிய வடிவம் பெற உள்ளது. இது பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் நடக்க வாய்ப்புள்ளது. 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த ரயில் நிலையத்தை நவீன வசதிகளுடன் மறுவடிவமைப்பதற்கான திட்டம் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. சுமார் 690 கோடி ரூபாய் செலவில் தெற்கு ரயில்வே நடத்த திட்டமிட்டுள்ளது.
கோயம்புத்தூர் ரயில் நிலையம் தற்போது ஆறு நடைமேடைகள் மற்றும் 13 தடங்களைக் கொண்டுள்ளது. இது “Land-locked” பகுதி என்பதால் புதிய ரயில் பாதைகள் அமைப்பது சாத்தியமில்லை. இருப்பினும், தற்போது உள்ள இடத்தை முழுமையாகப் பயன்படுத்தி கட்டமைப்பு மேம்படுத்தப்படும். பயணிகள் மற்றும் சரக்கு இயக்கம் அதிகம் உள்ளதால், நிலையத்தின் பராமரிப்பு மற்றும் வசதிகள் மிக அவசியமாகியுள்ளது.
புதிய திட்டத்தின் மூலம் பின்வரும் மாற்றங்கள்
- பயணிகளுக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
- ரயில் நிலைய வளாகத்திலேயே பெரிய வணிக வளாகங்கள் உருவாக்கப்படும்.
- பார்க்கிங் வசதி விரிவுபடுத்தப்படும்.
- நடைமேடைகள் அகலப்படுத்தப்படும்.
- புதிய கட்டிடங்கள் கட்டி, பயணிகள் கூட்டத்தைக் கையாள வசதியாக மாற்றப்படும்.
இந்த திட்டம் கோயம்புத்தூர் நகர வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும். வேலைவாய்ப்புகள் உருவாகும். வணிகம் வளர்ச்சி பெறும். மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து நகரத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
திட்டம் இன்னும் ஆரம்ப நிலையில் இருந்தாலும், விரைவில் கோயம்புத்தூர் ஒரு நவீன ரயில் நிலையத்தின் பெருமையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
