சென்னை, மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த முகேஷ் கலைச்செல்வம் (24) என்பவர் தனது நண்பர்களான புருஷோத், ராகுல் மற்றும் பாஸ்கர் ஆகியோருடன் இணைந்து கரையன்சாவடி பகுதியில் உள்ள தனியார் உணவகத்திற்கு உணவு அருந்த சென்றுள்ளார்.
பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அதில் இறந்த நிலையில் முழு கரைப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் பிரியாணியை பரிசோதனை செய்துவிட்டு கடையை உடனே மூடுமாறு தெரிவித்துள்ளனர்.
பிரியாணியை சாப்பிட்டதால் கலைச் செல்வத்திற்கு வாந்தி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
