Monday, August 4, 2025
HTML tutorial

கடமைகளைச் செய்ய மனமில்லாதவர் ஏன் அந்தப் பதவியில் இருக்க வேண்டும்? – முதல்வர் ஸ்டாலின் கேள்வி

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டார். அப்போது தேசிய கீதத்தை முதலில் பாடாமல் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டதால் அதிருப்தி அடைந்த அவர் சட்டசபையை விட்டு வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆளுநர் உரையை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே ஆளுநர் ஆர்.என் ரவி தனது வழக்கமாக வைத்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?” என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News