திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு தூய்மை பணியாளர்கள் மருத்துவம் அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மருத்துவமனையில், ஒப்பந்த அடைப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களை வைத்து, அங்குள்ள செவிலியர்கள் இருவர் நோயாளிகளுக்கு சிகிக்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க எலிகள் தொல்லை அதிகரித்து வருவதாகவும் நோயாளிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.