ஹரியானா மாநிலம், குருகிராமில் 11ஆம் வகுப்பு மாணவன், சக மாணவனை துப்பாக்கியால் சுட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவரின் கழுத்தில் குண்டு பாய்ந்து, ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத் தொடர்ந்து சதார் காவல் நிலையத்தில் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட இரண்டு இளம் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து போலீசார் ஒரு கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
