Thursday, December 11, 2025

போலீசிடம் குறுக்கே புகுந்து ஆங்கிலத்தில் பேசிய குடிமகனால் சிரிப்பலை

தென்காசியில் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது, குறுக்கே புகுந்து ஆங்கிலத்தில் பேசிய குடிமகனால் சிரிப்பலை ஏற்பட்டது.

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலில் ஈடுபட முயன்ற 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அப்போது, அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது, குறுக்கே புகுந்து ஆங்கிலத்தில் பேசிய குடிமகனால் சிரிப்பலை ஏற்பட்டது.

Related News

Latest News