கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பரப்புரையில் விஜயை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விசாரணை ஒரு புறம் சென்று கொண்டிருக்க, சில பிரபலங்கள் விஜய்க்கு எதிராக திரும்பியுள்ளனர்.
சத்யராஜ்:
கரூர் சம்பவம் நடந்த போது, சத்யராஜ் ஒரு வீடியோவை வெளியிட்டார். அப்போது, “தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது” என்ற பாடலை நினைவு கூர்ந்த அவர், கடைசியில் “ச்சே..” என்று வீடியோவை முடித்து விட்டார். இவர் விஜய்யை நேரடியாக சொல்லவில்லை என்றாலும், உரிய நபர் யாரோ அவர் மீது கடுங்கோபம் கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதைத்தாண்டி இப்போது வரை, இவர் விஜய் மீது கோபப்பட்டுதான் இந்த வீடியோவை வெளியிட்டதாக சிலர் கூறி வருகின்றனர்.
ஓவியா:
பிரபல தமிழ் நடிகை ஓவியா, கரூர் விஷயத்தில் சில பதிவுகளை ஆரம்பத்திலேயே வெளியிட்டார். “விஜய்யை கைது செய்ய வேண்டும்” என்று இவர் வெளியிட்டிருந்த பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், இதனை போட்ட சில மணி நேரத்திலேயே அவர் டெலிட் செய்தார். அப்போதும் விடாமல் விஜய் ரசிகர்களும் தவெக-வினரும் ஓவியாவை பயங்கரமாக திட்டி வந்தனர்.
ஜேம்ஸ் வசந்தன்:
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், சமீபத்தில் ஒரு பதிவை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதில், இத்தனை உயிர்கள் பறிபோய் இருக்கும் போது எப்படி சில தவெக-வினர் கூச்சமே இல்லாமல் “We Stand With Vijay” என்கிற வாசகத்தை எடுத்துக்கொண்டு வருகின்றனர் என்பது தெரியவில்லை என்று கூறியிருந்தார். தொடர்ந்து கரூர் சம்பவம் குறித்து பலர் கொடுக்கும் நேர்காணல்களையும் தனது பேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
எஸ்.வி.சேகர்:
விஜய் குறித்து பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், “மன்னிப்பு கேட்கிறவர்தான் பெரிய மனுஷன். 25 லட்சம் தரேன், உங்களால இறந்து போன 10 வயது குழந்தையை திரும்ப தர முடியுமா?” என்று கேட்டார்.