Wednesday, February 5, 2025

நெல்லையில் களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள்..!!

உலகம் முழுவதும் நாளை 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் தேவாலயங்கள் மின்னெளியில் ஜொலிக்கிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா களைகட்ட தொடங்கியுள்ளது. இதற்காக வீடுகள், நிறுவனங்களில் வர்ணம் பூசியும் மின்விளக்குகள், குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் அலங்கரித்தும் பண்டிகையை வரவேற்க தயாராக வருகின்றனர்.

குறிப்பாக பாளையங்கோட்டை கதீட்ரல் பேராலயம், பாளையங்கோட்டை புனித சவேரியார் பேராலயம், கிளாரிந்தா பேராலயம் போன்ற அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் ஜொலிக்கிறது. இதேபோல் கடைகளிலும் கிறிஸ்துமஸ் விற்பனை களைகட்டி உள்ளது.

இதையொட்டி திருநெல்வேலி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் ஜவுளிக்கடைகள் மற்றும் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை கடைகளில் விற்பனை களைகட்டி உள்ளது.

Latest news