Friday, December 13, 2024

கெட்ட கொழுப்பை குறைக்க அவசியம் சாப்பிட வேண்டிய ஆறு காய்கறிகள்!

உடல் எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம், சக்கரை நோய், இதய நோய், பக்க வாதம் மற்றும் பல உடல் உபாதைகளுக்கு முக்கிய காரணமாக அமைவது உடலில் சேரும் கெட்ட கொழுப்பாகும்.

இந்த கொழுப்பை குறைக்க  உடற்பயிற்சி, சீரான வாழ்க்கை முறையுடன் சேர்த்து நாம் உண்ணும் உணவை பற்றிய அறிவு அவசியம். நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் தக்காளியில் விட்டமின் A மற்றும் C நிறைந்திருப்பதுடன், அதில் உள்ள லைகோபீன் (Lycopene) என்னும் ஆன்டி ஆக்சிடெண்ட் கொழுப்பு குறைப்பில் சிறப்பாக செயல்படுகிறது.

உடலுக்குள் கடத்தப்படும் ஆக்சிஜெனால் ஏற்படும் அழுத்தம் கொழுப்பு உடலில் தங்க காரணமாகிறது. கத்தரிக்காய் சாப்பிடுவதால் இந்த சிக்கல் சுலபமாக நீங்கி விடும்.

நார்ச்சத்து, குறைவான கலோரிகள் மற்றும் polyphenolகள் மிகுந்த வெண்டைக்காய் சாப்பிடுவது உள்வீக்கங்களை கட்டுப்படுத்தி தீங்கு விளைவிக்கும் கொழுப்பையும் வெகுவாக குறைக்கிறது.

உடலில் அதிகரிக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க பூசணிக்காயை சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். மேலும், பூசணிக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

Bake செய்யப்பட்ட உருளைக்கிழங்கில் ஒரு வாழைப்பழத்தில் இருப்பதை விட, இதயத்திற்கு நன்மை தரும் பொட்டாசியம் அதிகம் கிடைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

உருளைக்கிழங்கை சரியான முறையில் சாப்பிடும் பட்சத்தில் கெட்ட கொழுப்பு குறைக்கப்பட்டு இதய நோய் மற்றும் பக்கவாதத்தில் இருந்து உடலை பாதுக்காப்பதாக கூறும் உணவியல் நிபுணர்கள் நாம் சாப்பிடும் தட்டில் எந்த அளவிற்கு கீரை, பச்சை காய்கறிகள் போன்ற பச்சை உணவுகள் இருக்கின்றதோ அந்த அளவிற்கு அது ஆரோக்கியமான மற்றும் கொழுப்பை குறைக்கும் உணவாக அமையும் என கருத்து தெரிவிக்கின்றனர்.

Latest news
Related news