கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் ரஷ்யா போர், எல்லை பிரச்சினை என அடுத்தடுத்த சிக்கல்களை எதிர்கொண்டு வரும் சீனாவின் பொருளாதார நிலைமை, முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது.
ஏப்ரல் மே மாதங்களில் நாடு தழுவிய பொருளாதாரத்தில் சிறிதும் வளர்ச்சி ஏற்படாத நிலையில், ஜூலை மாதத்தில் இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் 19.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இச்சூழலால் பெரும் பாதிப்புக்குள்ளான சிறு, குறு தொழில் முனைவோர் கடை வாடகை, மக்களிடையே குறைந்து வரும் வாங்கும் சக்தி போன்ற சவால்களை சமாளிக்க புதிய யுக்தி ஒன்றை கையிலெடுத்துள்ளனர்.
தங்களிடம் இருக்கும் கார்களையே கடைகளாக மாற்றி தெருக்களில் நிறுத்தி, வியாபாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். பெரிய அளவில் உடனடி லாபம் ஈட்ட முடியவில்லை என்றாலும் கூட, இம்முயற்சி நம்பிக்கை அளிப்பதாக கார் கடை உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நிதி நெருக்கடியால் முளைத்தாலும் கூட, சீனாவின் கார் கடைகள், வண்ணமயமாக ட்ரெண்டிங் creativity உடன் இருப்பது கூடுதல் சுவாரஸ்யம்.