Monday, July 7, 2025

‘வச்சான் பாரு ஆப்பு’ இந்தியாவால் ‘தூக்கமின்றி’ தவிக்கும் சீனா, பாக்

வெளியில் நல்லவன் போல காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் இந்தியா மீது எக்கச்சக்க வன்மத்தை சீனா ஒளித்து வைத்துள்ளது. இதற்கு இந்தியாவின் ராணுவ வலிமையும் முக்கிய காரணம் ஆகும். இதனால் தான் இந்தியாவின் எதிரியான பாகிஸ்தானை சீனா பாலூட்டி வளர்த்து வருகிறது.

இந்தநிலையில் நம்முடைய ராணுவ வலிமையை அதிகரிக்கும் வகையில், முக்கிய முடிவொன்றை இந்தியா எடுத்துள்ளது. இதனால் சீனா, பாகிஸ்தான் இரு நாடுகளும் தூக்கமின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

போர் பதற்றத்தின்போது இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளும், ஆளில்லா வான்வழி விமானங்களை வைத்து நேருக்கு நேர் மோதிக்கொண்டன. குறிப்பாக இந்த மோதலில் ட்ரோன்கள், தற்கொலை டிரோன்கள், சுற்றித் திரியும் வெடிமருந்துகள் போன்றவை அதிகளவில் பயன்படுத்தப் பட்டன.

இதைப்பார்த்த இந்தியா மிகப்பெரிய அளவில் ராணுவ ட்ரோன்களை, உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும் என முடிவெடுத்து தற்போது அதற்காக 2000 கோடி ரூபாயை, நிதியாக ஒதுக்கி இருக்கிறது. இதனால் வரும் காலங்களில் இந்திய விமானப்படையின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும்.

இதன்கீழ் வரும் 2028ம் ஆண்டுக்குள் குறைந்தது 40 சதவீத ட்ரோன்களை உருவாக்கிட இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலக்கூறுகள் அளவு குறையும். அத்துடன் சீனா மற்றும் துருக்கி நாடுகளால் ஆதரிக்கப்படும் பாகிஸ்தான் ட்ரோன்களை எதிர்க்கவும் உதவியாக இருக்கும்.

இந்தியா தற்போது இஸ்ரேலிடம் இருந்து அதிகளவு ட்ரோன்களை இறக்குமதி செய்து வருகிறது. சமீபத்திய நிலவரப்படி இந்தியாவில் 600க்கும் மேற்பட்ட ட்ரோன் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. என்றாலும் மோட்டார்கள், சென்சார்கள், இமேஜிங் அமைப்புகள் போன்ற சில மூலக்கூறுகளுக்கு இந்தியா தற்போது வெளிநாடுகளை தான் அதிகம் சார்ந்திருக்கிறது.

மற்ற நாடுகளை அதிகம் சார்ந்திருப்பதை தவிர்க்கவும், எதிரி நாடுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் இந்தியா இந்த ட்ரோன் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதைப்பார்த்த சீனா, பாகிஸ்தான் நாடுகள் இதற்கு எப்படி தகுந்த பதிலடி கொடுப்பது? என்று தீவிர யோசனையில் ஈடுபட்டு இருக்கின்றனவாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news