வியட்நாமுடன் உள்ள எல்லைப் பகுதிகளில் ரோந்து மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வாக்கர் S2 என்ற மனித உருவ ரோபோக்களை பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. .
வாக்கர் S2 என்பது கால்கள், கைகள் மற்றும் உடற்பகுதியுடன் கூடிய முழு அளவிலான மனித உருவ ரோபோ ஆகும். மனிதர்கள் அதிகம் கூடும் இடங்களில் இயங்கும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் தாமாகவே பேட்டரிகளை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை. மேலும், 125 டிகிரி கோணத்தில் வளையும் தன்மை கொண்டதுடன், 15 கிலோ எடையை தூக்கி கையாளும் திறனும் இதில் உள்ளது.
இந்த ரோபோக்களில் அதிநவீன கேமராக்கள், சென்சார்கள் மற்றும் இரவு நேரத்திலும் பார்க்கும் நைட் விஷன் வசதி பொருத்தப்பட்டுள்ளது.
ஃபாங்செங்காங் எல்லைப் பகுதியில், பயணிகள் வரிசைகளை ஒழுங்குபடுத்துதல், வாகனங்களை வழிநடத்துதல் மற்றும் பயணிகளின் அடிப்படை கேள்விகளுக்கு பதிலளித்தல் போன்ற பணிகளில் இந்த ரோபோக்கள் எல்லை அதிகாரிகளுக்கு உதவ உள்ளன. சில ரோபோக்கள் ஹால்கள் மற்றும் காத்திருப்பு பகுதிகளில் ரோந்து பணிகளையும் மேற்கொள்ளும்.
மேலும், சில ரோபோக்கள் சரக்கு பாதைகளில் செயல்படும். அவை கொள்கலன்களின் அடையாள எண்களை சரிபார்த்தல், முத்திரைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் அனுப்பும் மையங்களுக்கு நிலை குறித்த தகவல்களை (Status Updates) அனுப்புதல் போன்ற பணிகளின் மூலம் தளவாடக் குழுக்களுக்கு ஆதரவாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
