செயற்கை சூரியனை உருவாக்கிய சீனா

394
Advertisement

அசல் சூரியனைவிட 5 மடங்கு அதிக வெப்பத்தை உமிழும் செயற்கை சூரியனை உருவாக்கி சீனா வியத்தகு சாதனை படைத்துள்ளது.

7 கோடி டிகிரி வெப்பத்தில் 17 நிமிடங்கள் ஒளி வீசியுள்ளது இந்த சூரியன். இதன்மூலம் சீனாவின் செயற்கை சூரியன் திட்டம் வெற்றிபெற்றுள்ளது.

1999 ஆம் ஆண்டிலிருந்தே ஈஸ்ட் என்னும் பெயரில் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வந்தது. இதற்காக 70 லட்சம் கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளது சீனா.

ஆரம்பத்தில் மிகக்குறைந்த வெப்பத்தை, மிகக்குறைந்த நேரம் மட்டுமே இந்த செயற்கை சூரியன் வெளிப்படுத்தியது. படிப்படியாக அதனை மேம்படுத்திய சீன விஞ்ஞானிகள் சமீபத்தில் 7 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உருவாக்கினர். இது சூரியனைவிட 5 மடங்கு அதிகமாகும்.

மாசு ஏற்படாத வகையில் சுத்தமான எரிசக்தியைத் தயாரிப்பதற்கான சீனாவின் செயற்கை சூரியன் திட்டத்துக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம் இந்தத் திட்டத்தை சீனா தீயநோக்கங்களுக்குப் பயன்படுத்துமோ என்னும் அச்சமும் எழுந்துள்ளது.

இதற்கிடையில் பிரான்ஸ் நாடும் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு இட்டர் என்று பெயர் சூட்டியுள்ளது.

சூரிய சக்தியானது அணுக்கரு இணைவுமூலம் உருவாகிறது. சூரியனின் மையப்பகுதியிலுள்ள ஹைட்ரஜன் கருக்களை ஹீலியமாக இணைப்பதன்மூலம் 1.5 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தை ஏற்படுத்துகிறது.

இது பல வகைகளில் மனித இனத்துக்குப் பலன் அளித்துவருகிறது குறிப்பிடத்தக்கது,.