தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அமைச்சர் முத்துசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன் குறித்து அவர் பேசுகையில், நயினார் நாகேந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யும்போது கூட சிரித்துக்கொண்ட செல்வார். யாரும் கோபம் வராத அளவுக்கு நடந்துகொள்ளக்கூடியவர் நயினார் நாகேந்திரன்.” என புகழ்ந்து பேசியுள்ளார்.
