Wednesday, December 24, 2025

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்க்கு ரூ. 5 கோடி பரிசுத்தொகை

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்க்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த குகேஷ், செஸ் உலகில் இளம் சாம்பியன் ஆகி புதிய சாதனை படைத்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்த், சர்வதேச போட்டிகளில் விளையாடி உலக சாம்பியன் பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அவருக்குப் பிறகு, உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் தற்போது பெற்றுள்ளார். இந்த சாதனையை கொண்டாடி, நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து லோக்சபாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குகேஷ்க்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News