தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம் அருகே 115.38 கோடி ரூபாயில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 2.27 லட்சம் சதுர அடி பரப்பளவில் 6 தளங்களுடன் புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
400 படுக்கைகள், 6 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல் மருத்துவமனை ஒரு கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆய்வகம், மற்றும் 3 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.