Wednesday, April 2, 2025

இது பண பிரச்சனை அல்ல, இனப்பிரச்சனை : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு

தாய்மொழியை காப்போம், இது பண பிரச்சினை அல்ல, இனப்பிரச்சினை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல என தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்தி மொழி திணிப்பு நம் பண்பாட்டையே அழிக்கும் எனவும் எச்சரித்திருக்கும் நிலையில், மாநில சுயாட்சியை காக்கும் அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

Latest news