கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்

234 தொகுதிகளுக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. இதில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களைத் தொடர்ந்து தற்போது 4 ஆவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதையடுத்து 2026 தேர்தலில் திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் நாளை(மார்ச் 31) முதல் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

Related News

Latest News