முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தபடியே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பங்கேற்று இருந்த மக்களை காணொலி மூலமாக சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.