தென்காசியில் அரசு பள்ளி பின்புறம் கொட்டப்பட்ட கோழி கழிவுகளால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அரசு பள்ளி பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில், கோழி கழிவுகள் ஏராளமாக கொட்டப்பட்டுள்ளதாகவும், அவைகள் சிதைந்து துர்நாற்றம் வீசக்கூடிய நிலையில் காணப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த்துள்ளது.
இதனால், அவ்வழியாக செல்லும் மாணவர்கள் அவதி அடைந்து வருவதாகவும், மேலும் பள்ளியின் உட்புறமும் துர்நாற்றம் அதிகளவு வீசுவதால் மாணவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டும், முககவசம் அணிந்து கொண்டும் கல்வி கற்கக்கூடிய சூழல் நிலவி வருகிறது.
இதன் காரணமாக நோய் தொற்று அபாயம் ஏற்படும் என பள்ளி நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவித்தும், இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.