சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில் ஊபர் செயலியிலும் இனி சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊபர் செயலி மூலம் இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை 50 சதவீதம் சலுகை விலையில் மெட்ரோ டிக்கெட்டை பெறலாம்.
ஊபர் செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் வசதியை பெறும் நகரங்களில் டெல்லிக்கு அடுத்து இரண்டாவதாக சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.